வெற்றி உறுதி.. லக்னோ கூட அருமையான இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு.. இப்படி பயன்படுத்துவோம் – ருதுராஜ் சவால்

இன்று சென்னை சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளை வென்று 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் லக்னோ அணிக்கு எதிராக இன்னும் ஒரு போட்டியும் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மீதம் உள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

- Advertisement -

இந்த போட்டி குறித்து ருதுராஜ் “இந்த ஆடுகளம் முக்கியமாக ஒரு வார காலமாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. காரணம் இது தொடர்ந்து மழை வந்து கொண்டிருக்கிறது. எனவே ஆடுகளம் எப்படி இருக்கும் என நாங்கள் முதலில் பந்து வீசி பார்த்து தெரிந்து கொள்வோம். மூடி வைத்திருப்பதால் எங்களுக்கு சாதகம் நிச்சயம் இருக்கும்”

- Advertisement -

“நாங்கள் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் உடனடியாக மாறி கொள்வது மிகவும் முக்கியம். மூன்று தோல்விகளுக்கு பிறகு நாங்கள் தொடர்ந்து போட்டிகளை வென்று வருவது எங்கள் அணியின் நம்பிக்கையை மிகச் சிறப்பாக மாற்றி உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles