கிரிக்கெட் உலகின் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிரிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டின் மிகச் சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறார். தனது பவர் ஹிட்டிங் மூலமாக டி20 கிரிக்கெட் இப்படித்தான் அணுகி விளையாட வேண்டும் என்று பெரிய முன் உதாரணமாக அமைந்திருக்கிறார். இந்த நிலையில் கிறிஸ் கெயில் ஒரு காலத்தில் தனது வீட்டு கரண்ட் பில்லை கூட கட்ட முடியாமல் தன்னை ஒரு ஐபிஎல் அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி இடம் கேர்ள் கேட்டதாக ஒரு உருக்கமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “2011ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கெயிலை எந்த ஐபிஎல் அணியும் வாங்க முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது கெயில் எனக்கு நேரடியாக தொடர்பு கொண்டு லலித், நான் இப்போது பெரிய கடன் சுமையில் இருக்கிறேன்.
என் வீட்டு கரண்ட் பில் கூட என்னால் கட்ட இயலவில்லை. எனவே என்னை ஏதேனும் ஒரு ஐபிஎல் அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார். அந்த சமயத்தில் நானும் மற்ற அணிகளிடம் கேட்டுப் பார்த்தேன்.
அப்போது எந்த அணியும் இவரை தங்கள் அணிக்கு வாங்கிக் கொள்ள முன்வரவில்லை. அந்த சமயத்தில் தான் பெங்களூர் அணியில் ஒரு வீரருக்கான இடம் இருப்பதை கேள்விப்பட்டு அப்போதைய பெங்களூர் அணியின் தலைவர் மல்லையாவிடம் பேசினேன். அவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கூறினேன். அதற்குப் பிறகு நான் சொன்னது போலவே நடந்தது” என்று பேசினார். அந்த ஆண்டில் துணை அணிக்கு எதிராக கையில் அடித்த 175 ரன்கள் தற்போது வரை உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

