சும்மா டீம்ல உட்கார வரமாட்டேன்.. நான் இறங்குனா ஜெயிக்கணும்.. எம் எஸ் தோனியை மறைமுகமாக தாக்கினாரா விராட் கோலி.? வைரலாகும் பேட்டி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதில் பெங்களூர் அணியின் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸ் அடங்கும்.

- Advertisement -

இதில் போட்டி முடிந்த பின்பு பேசிய விராட் கோலி, “வெறுமனே அணியில் இருப்பதைவிட அணியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் அதுவே என்னுடைய முக்கிய குறிக்கோள்” என்று பேசி இருந்தார். இது தற்போது சென்னை அணியின் மகேந்திர சிங் தோனியை விராட் கோலி மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறாரா? என்று ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். எம்எஸ் தோனிக்கு வயது தற்போது 4
44 ஆக இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து விளையாடி வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

மேலும் அவர் கடைசி கட்டத்தில் இறங்கி விளையாடுவது வணிக ரீதியாக இருக்கிறதே தவிர அணியின் வெற்றிக்காக இல்லை என்பது பெரும்பாலானவரின் கருத்தாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தோனி தற்போது தசை பிடிப்பால் முதல் இரண்டு வாரங்களில் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவரது இழப்பு அது சிஎஸ்கே அணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles