ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை இரண்டாவதாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறும் உழைப்பில் தீவிரமாக உழைத்து வருகிறது. இதற்கு கடந்த ஆண்டு பெங்களூரு அணியின் ஆலோசகராக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் கோப்பையை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
மெகா ஏலத்தில் ஒரு குழுவாக அவர் செயல்பட்ட விதமும், போட்டிக்கு முன்னர் அவரது திட்டமிடலும் பெங்களூர் அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. இந்த சூழ்நிலையில் தனது ஆல்டைம் ஆர்சிபி 11 அணியை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள நிலையில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் பாப் டு பிளஸிஸ் இருவரையும் தேர்வு செய்திருக்கிறார். மூன்றாவதாக விராட் கோலியை வைத்திருக்கிறார். மேலும் நான்காவது இடத்தில் டிவிலியர்ஸை வைத்திருக்கும் நிலையில் ஐந்தாவது இடத்தில் பட்டிதாரை தேர்வு செய்து அவரை கேப்டனாக நியமித்திருக்கிறார்.
விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா மற்றும் ஆல் ரவுண்டர் பட்டியலில் குருனால் பாண்டியா இடம் பெற்றிருக்கிறார். மேலும் பவுலிங் வரிசையில் சஹால், ஹாஸில் வுட், சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை தேர்வு செய்து இருக்கிறார். இந்த நிலையில் கேப்டனாக விராட் கோலியை விடுத்து ராஜத் பட்டிதாரை அவர் தேர்வு செய்திருப்பதால் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

