நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதற்குப் பிறகு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் முதல் முறையாக கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.
இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா இந்த முறை லீக் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது அனைவருடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா அணி t20 கிரிக்கெட்டில் மட்டும் பின் தங்கி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் பேசும்போது “இந்தத் தொடரில் இந்திய அணிக்கு டப் கொடுக்கக்கூடிய ஒரே அணி என்றால் அது என்னை பொருத்தவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே. ஆனா போன முறை உலகக்கோப்பை அவங்க கால்ல வச்சு அவமதிச்சப்பவே கோப்பை அவங்க மேல கோபம் ஆயிடுச்சு போல. ஆனா சூர்யா அப்படி கிடையாது அவர் உலக கோப்பையை ஒரு கடவுள் போல மதிக்கிறார். அந்த அர்ப்பணிப்பு மற்றும் மரியாதை தான் அவருக்கு தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறது” என்று பேசி இருக்கிறார்.

