கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி ஒருபுறம் கொண்டாட்டத்தில் திகைத்து கொண்டிருக்க, மறுபுறம் இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி t20 உலக கோப்பையில் வெற்றி பெற்றது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயாப் அக்தர் இது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “இந்தியா கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்துவிட்டது என்று நான் கூறுவேன். ஒரு பகுதியில் பணக்கார குழந்தை ஏழை குழந்தைகளை அழைத்து, வா கிரிக்கெட் விளையாடலாம் என்று சொல்வது போல இந்தியா தற்போது செய்து கொண்டிருக்கிறது.
8 அணிகளில் 4ஐ தேர்ந்தெடுத்து அதில் 3ஐ மீண்டும் அழைத்து பாருங்கள், நான் வெற்றி பெற்றேன் என்று கூறுகிறார்கள் இது கிரிக்கெட்டை முற்றிலும் அழிப்பது போன்றதாகும். ஆனால் கௌதம் கம்பீர் குறித்துக் கூறும் போது அவர் தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுத்து வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். அவரது நம்பிக்கைதான் போட்டிகளில் தெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று பேசி இருக்கிறார்.

