இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்ததாக கால் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சந்திக்க உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக இந்திய அணி t20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்கிற சாதனையை படைத்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஜிம்பாவே அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க வீரர் பென்னட் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார். அவருக்கு கம்பெனி கொடுத்த கேப்டன் சிக்கந்தர் ராசா 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
இருப்பினும் தொடக்க வீரர் பென்னட் சிறப்பான ஆட்டத்தை விளையாடி 59 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இது 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் அடங்கும். இதன் மூலமாக ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து 72 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இனி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.

