தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தவில்லை.. அதுக்கு பதிலா முகத்திலே அரைஞ்சுட்டாங்க – பாக் முன்னாள் வீரர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்து இருப்பது பல்வேறு முன்னாள் வீரர்கள் இடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அது குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 176 ரன்கள் குறித்து அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. கடந்த ஓராண்டாக இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் இந்த தாக்குதல் ஆட்டம் இந்திய அணிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறலாம்.

- Advertisement -

இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயாப் அக்தர் கூறும் போது “தென்னாபிரிக்க அணி என்னை பொறுத்தவரை இந்திய அணியை வீழ்த்தவில்லை, மாறாக முகத்தில் அறைந்து உள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு சரியான பழி தென்னாபிரிக்க அணிதிர்த்து விட்டது. இந்திய அணி அதீத நம்பிக்கையில் மிதந்தது. இந்த மோசமான தோல்வி நிச்சயம் அவர்களின் கண்களை திறக்கும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles