வருண் சக்கரவர்த்தி கிடையாது இவர்தான் பாகிஸ்தான் அணிக்கு பெரிய சவாலாக இருப்பார்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் பேட்டி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கமாக ஐசிசி நிகழ்வுகளில் மட்டுமே மோதிக் கொள்ளும் இந்த இரண்டு அணிகள் இரண்டு நாட்டு ரசிகர்கள் இடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. மேலும் சொந்த மண்ணில் இந்திய அணியும் மிகவும் வலுவானதாக இருக்கிறது.

- Advertisement -

வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் என இரண்டு பகுதிகளிலும் இந்திய அணி மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மொயின் அலி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான t20 போட்டி குறித்த சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார். மேலும் நாளைய போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பாகிஸ்தான் வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடிய வகையில் இருப்பார் என்று சில விஷயங்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு பெரிய ஆபத்தாக இருக்கக்கூடும். பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் தந்திரங்கள் மற்றும் பந்துவீச்சு மாறுபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி கூட்டணி பெரிய ஆபத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன் அவர்தான் இந்த போட்டியில் மிகவும் சவாலாக இருப்பார்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles