பும்ரா விஷயத்தில் இந்திய நிர்வாகம் செய்தது என்னை பொறுத்தவரை சரியே.. அதை தப்பு சொல்ல முடியாது – ஜாகீர் கான் பேட்டி

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 93 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா நான்கு ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ரோகித் சர்மா டி20 கேப்டனாக இருந்தபோது பவர் பிளேவில் பும்ரா எப்படியும் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசி விடுவார். ஆனால் தற்போது சூர்யா தலைமையிலான இந்திய அணியில் பெரும்பாலும் பவர் பிளே முடிந்த பிறகு பும்ரா தனது முதல் ஓவரை வீச ஆரம்பிக்கிறார். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மோகித் சர்மா பவர் ப்ளே முடிவதற்குள் பும்ரா ஒரு ஓவராவது வீசுவது தான் சரி என்று கூறிய நிலையில் அவரது கருத்தை மறுத்து ஜாஹீர் கான் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “பும்ரா பவர் பிளேவில் ஒரு ஓவராவது வீசவேண்டும் என்று நான் இப்போதும் நினைக்கிறேன். அவர் இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தையே தவற விட்டு வருகிறார் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் பவர் பிளே முடிப்பதற்கு ஆறாவது வரை பும்ரா வீசி இருக்கலாம் என்று மோகித் சர்மா பேசியிருந்தார். ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய நிர்வாகம் செய்வது சரி என்று நினைக்கிறேன். பும்ரா விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் செய்வது சரி என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என ஜாகீர் கான் பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles