2024 டி20 உலகக் கோப்பை.. இந்திய கேப்டன் யார்.?.. வாய் தவறி உண்மையை உடைத்த ஜெய்ஷா

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் மிகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டுப் பிறகு உலக கோப்பையை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய டி20 அணி ஏறக்குறைய இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஐபிஎல் தொடரினை பொறுத்து இறுதி அணியை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய உலகக்கோப்பை டி20 அணிக்கு ரோகித் சர்மாவே திரும்பவும் கேப்டனாக அணியை வழிநடத்த கூடும் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கு தகுந்தார் போலவே இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா கணுக்கால் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் குறுகிய கால கிரிக்கெட்டுக்கு கேப்டனாக பதவியேற்று அணியை வழிநடத்தினார். இவர் கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக பதவி வகித்தார். எனவே ஹர்திக் பாண்டியாவின் வரவு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மையத்திற்கு நிரஞ்சன் ஷா என்று மறு பெயரிடும் விழாவில் கலந்துகொண்டு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஆண்கள் மூத்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ஐபிஎல் தலைவர் அருண் துமால் மற்றும் அணில் கும்ளே ஆகியோரின் முன்னிலையில் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

- Advertisement -

இது குறித்து ஜெயிஷா கூறுகையில்
“நாங்கள் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் நடைபெற்ற 10 போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அனைத்து இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளோம். எனவே வரும் டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை நிச்சயமாக கைப்பற்றும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதன் மூலம் வரும் உலக கோப்பையில் ரோகித் சர்மா அணியை வழி நடத்துவார் என்ற தகவல் உறுதி அடைந்துள்ளது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் வருகை அணிக்கு மேலும் புத்துணர்ச்சியைக் கொடுத்து டி20 உலகக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles