ஐபிஎல் 2024ல் புதிய ரோல்.. தோனியின் பதிவால் கிளம்பிய பரபரப்பு… சிஎஸ்கே ரசிகர்கள் கவலை

17வது சீசன் இந்தியன் பிரீமியர் லீக் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுவதைத் தொடர்ந்து சீனியர் வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -

விராட் கோலிக்கு மகன் பிறந்துள்ளதால் அவர் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆன டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் சென்னை அணியுடன் ஆன முதல் போட்டியில் பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க, சென்னை அணியின் ஆஸ்தான கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக குஜராத் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை அணியுடன் இன்றோ? அல்லது நாளையோ? இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதுவே எம்.எஸ் தோனிக்கு கடைசி சீசன் ஆக இருக்கும் என்று அனைவராலும் நம்பப்படுவதால், சென்னை அணி பங்குபெறும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் அவரது பால்ய நண்பர் மகேந்திர சிங் தோனி இன்னும் இரு இரண்டு சீசன்களில் விளையாடுவார் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

சென்னை அணி மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும். யார் என்ன கூறினாலும் கடைசியில் எம்.எஸ் தோனி எடுக்கும் முடிவே இறுதியானது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் அதிரடியான முடிவுகளை எடுப்பதில் எம்.எஸ் தோனிக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

- Advertisement -

இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் “can’t wait for the new season and the new ‘role’. Stay tuned”.! என்று பதிவிட்டுள்ளார். அதாவது வரவிருக்கும் ஐபிஎல் மற்றும் தான் ஏற்க இருக்கும் புதிய பொறுப்பு இந்த இரண்டுக்காகக் காத்திருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் வேளையில், இது தோனி நடிக்கும் புதிய விளம்பரத்திற்கான அறிவிப்பா? அல்லது சென்னை அணியின் கேப்டன்சியில் இருந்து விலகுகிறாரா? அல்லது தற்போது காயம் அடைந்திருக்கும் தொடக்க ஆட்டக்காரர் கான்வேவுக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்க உள்ளாரா? என்பது குறித்து ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

எனவே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீளமான முடியுடன் புதிய ஹேர் ஸ்டைலில் களமிறங்கும் தோனி தனது தொடக்க காலத்திலும் இதே போன்று நீளமான முடியுடன் இந்திய அணிக்குள் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறு ஆரம்பித்தாரோ அவ்வாறே முடிக்கப் போகிறாரா என்பதும் அனைவரின் கேள்வியாக உள்ளது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles