20 ஓவர்.. 0 சிக்ஸ்.. 427 ரன்.. ஆச்சரிய ஸ்கோர் கார்டு.. அர்ஜென்டினா அணி படைத்த வேர்ல்ட் ரெக்கார்ட்.. எல்லா சாதனைகளும் உடைந்தன.!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலேயே 400 ரன்கள் என்பது எப்போதாவது அரிதாக நடைபெறும் நிகழ்வாக இருக்கும் நிலையில் டி20 கிரிக்கெட் போட்டியில் 400 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா.? ஆம் அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அர்ஜென்டினா மற்றும் சிலி மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி பியூனஸ் ஏர்ஸ் நகரில் அமைந்துள்ள செயின்ட் அல்பண்ஸ் கிளப் மைதானத்தில் வைத்து 13ம் தேதி நடைபெற்ற போட்டியில் தான் இந்த சாதனையை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிலி அணியின் கேப்டன் கமிலா வால்டெஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அர்ஜென்டினா அணியின் ஓப்பனிங் துவக்க வீராங்கனைகள் லூசியா டெய்லர் மற்றும் ஆல்பர்டினா கலன் ஆகியோர் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 16.5 ஓவர்களில் 350 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய லூசியா டெய்லர் 84 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 27 பவுண்டரிகள் அடங்கும். டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

- Advertisement -

இவருடன் விளையாடிய ஆல்பர்டினா கலன் 84 பந்துகளில் 145 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 23 பவுண்டரிகள் அடங்கும். மூன்றாவது வீராங்கனையாக களம் இறங்கிய மரியா காஸ்டினீராஸ் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 427 ரன்கள் குறித்தது. மேலும் இவர்களது ஆட்டத்தில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் சிறிய அணியின் பொந்து வீச்சாளர்கள் 73 உபரி ரன்களை கொடுத்திருக்கின்றனர். இது ஒரு டி20 போட்டியில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச உபரி ரன்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து ஆடிய சிலி அணி 15 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அர்ஜென்டினா 364 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் பல அரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில மோசமான சாதனைகளும் அடங்கும்.

- Advertisement -

டி20 மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 350 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை. இதற்கு முன்பு பகரை அணி சவுதி அரேபியா அணிக்கு எதிராக 318 ரன்கள் எடுத்தது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் சாதனையாக இருந்தது. இது தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு பஹ்ரைன் வீராங்கனை தீபிகா ரசாங்கிகா சவுதி அரேபியாவிற்கு எதிராக எடுத்த 161 ரன்கள் மகளிர் டி20 கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட தனிநபர் சாதனையாக இருந்தது. இந்த சாதனையும் தற்போது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அர்ஜென்டினா அணியின் லூசியா டெய்லர் இந்தப் போட்டியில் 169 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த தனிநபர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும் இந்த போட்டியில் படைக்கப்பட்ட பிற சாதனைகள்:

முதல் 400+ மொத்தம்

ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் – 169 (லூசியா)

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் – 350 (லூசியா மற்றும் ஆல்பர்டினா)

ஒரு அணி இன்னிங்ஸின் ஆரம்ப கட்டத்தில் பெண்கள் டி20 சதத்தை எட்டியது – லூசியா 10.2 ஓவர்களில்

அதிக நோ-பால் (64) மற்றும் அதிக எக்ஸ்ட்ரா (73)

ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது – 52 ரன்கள் புளோரன்சியா மார்டினெஸ்

ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது – 92 (கான்ஸ்டான்சா ஓவர்ஸ்)

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles