சாஹல் – மனைவி தனஸ்ரீ இடையே விவாகரத்து? சமூக வலைத்தளத்தில் டெலிட் செய்யப்பட்ட புகைப்படங்கள்!

பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாகல் தனது மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது வீரர்கள் தங்களுடைய மனைவியை விவாகரத்து செய்வது என்பது தொடர் கதையாகி வருகிறது.

- Advertisement -

அண்மையில் ஷிகர்தவான், ஹர்திக் பாண்டியா போன்ற பிரபல வீரர்கள் தங்கள் மனைவியை பிரிந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் சாகலும் இணைய உள்ளார். கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு சாகல் தனஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.தனஸ்ரீ பார்ப்பதற்கு ஹீரோயின் மாதிரி அழகாக இருப்பதால் சாகல் அவருக்கு சரியான இணை கிடையாது என்று அப்போதே ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

- Advertisement -

எனினும் சாகலின் திறமையை பார்த்து தான் அவரை திருமணம் செய்ததாக தனஸ்ரீ கூறியிருந்தார். இந்த சூழலில் சாகலை மணந்த பிறகு தனஸ்ரீ வாழ்க்கை தலைக்கீழ் மாறியது. குடும்பப் பெண்ணாக வாழ்ந்த தனஸ்ரீ திடீரென்று உடை மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டார்.

- Advertisement -

இந்த சூழலில் தனஸ்ரீ பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை காதலிப்பதாகவும் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்வதாகவும் சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவின. இதனை முதலில் யாருமே மறுக்கவில்லை.ஆனால் தனஸ்ரீ தன்னுடைய ஆண் நண்பர்களிடம் நடந்து கொள்ளும் விதமும் சர்ச்சையானது.

தனது ஆண் நண்பர்களுடன் அவ்வப்போது தனஸ்ரீ எடுத்துக் கொள்ளும் ஆபாச போட்டோ  இணையத்தில் வலம் வந்தன. இதனால் சாகல் பலமுறை மனமுடைந்து சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கவலையை மறைமுகமாக வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இந்த சூழலில் தனஸ்ரீ தானும் சாகலும் எப்போதும் போல நல்ல கணவன் மனைவியாக இருக்கிறோம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது என ரசிகர்கள் நினைத்த நிலையில் தற்போது இந்த ஜோடி சமூக வலைத்தளத்தில் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக டெலிட் செய்திருக்கிறார்கள்.

மேலும் சமூக வலைத்தளத்தில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சாகல் தனஸ்ரீ இருவரும் விவகாரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அண்மையில் டி20 உலக கோப்பையில் சாகல் இடம் பெற்றாலும் அவர் ஒரு போட்டியில் கூட சேர்க்கப்படவில்லை.இது போன்ற சாகல் இந்திய அணிக்காக விளையாடி ஒன்றரை ஆண்டுகள் மேல் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles