ரோகித் சர்மாவுக்கு இங்கிலீஷ் வராது.. இதற்காக அவரை நாங்கள் கலாய்த்திருக்கிறோம்.. ஆரம்ப காலம் குறித்து மனம் திறக்கும் யுவராஜ் சிங்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங்கை விளம்பர தூதராக அறிவித்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி குறித்தும், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா குறித்தும் பல விஷயங்களை யுவராஜ் சிங் பகிர்ந்து கொண்ட வேளையில், ரோகித் சர்மாவுக்கு சரியாக ஆங்கிலம் பேச வராது என்றும், அதனால் அவரை நாங்கள் கலாய்த்துருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணி வென்ற இரண்டு முக்கிய உலகக்கோப்பைகளான டி20 உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பையில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு பெரும் வகையில் உதவியது. 2024 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ள நிலையில் இவரை விளம்பர தூதராகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமித்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு தற்போது ஆதரவு தெரிவித்திருக்கும் யுவராஜ் சிங் ரோகித் சர்மா குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தெளிவான முடிவுகளை எடுக்க சிறந்த கேப்டன் தேவை என்றும் அதற்கு ரோகித் சர்மாதான் சரியான தீர்வாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ரோகித் சர்மா வேடிக்கையான மனிதர் என்றும் மற்றவர்களுடன் விளையாட்டாக பழகுவார் என்றும் கூறியிருக்கிறார்.

ரோகித் சர்மாவின் ஆரம்ப கால ஆங்கிலம் குறித்து யுவராஜ் சிங் கூறும்பொழுது
“ரோகித் சர்மாவுக்கு ஆரம்ப காலங்களில் ஆங்கிலம் சரியாகப் பேச வராது. இதனால் நாங்கள் அவரை பெரும்பாலும் கலாய்த்திருக்கிறோம். இருந்தாலும் கனிவான இதயம் கொண்ட ரோஹித் சர்மா அதனைப் புன்னகையுடன் கடந்து செல்வார். அவரது குணம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவருடன் இன்றும் பல வீரர்கள் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா குறித்த யுவராஜ் சிங்கின் பதிவு தற்போது ரோகித் சர்மாவுக்கு இன்னும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ரோஹித் சர்மா மிகவும் நற்பண்பு கொண்ட மனிதர் என்றும் அணி வீரர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பார் என்று அணி வீரர்களே அவ்வப்போது கூறியும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:பும்ராவுக்கு ஓய்வு தராமல் மும்பை அணி விளையாட வைப்பது நியாயமா.? நீங்க இப்படியும் பேசுவீங்க அப்படியும் பேசுவீங்க.. விளக்கம் அளித்திருக்கும் பொல்லார்டு

தற்போது யுவராஜ் சிங்கின் இந்த பதிவு அவரின் மீதான நன்மதிப்பை இன்னும் மென்மேலும் உயர்த்தி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டி வரை வந்து தவறவிட்ட நிலையில் இந்த முறை டி20 உலக கோப்பை நிச்சயமாக இந்திய அணி கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய படை உலகக்கோப்பையை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles