கன்சிஸ்டன்சி முக்கியம்டா பசங்களா.. சீனியர்களிடம் இருந்து ஜூனியர்கள் அதை கற்க வேண்டும்.. தோனி பேட்டி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

கம்போஜ் அசத்திவிட்டார்

இதன் மூலமாக சிஎஸ்கே அணி 10வது தோல்வியை இந்த சீசனில் பெற்றுள்ளது. இந்த தோல்விக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசும் போது, சிஎஸ்கே அணி எடுத்த ஸ்கோர் சிறந்தது என்று நினைக்கிறேன். பிரெவிஸ் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. ரிஸ்க் எடுத்து சில ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார். அந்த ஓவர்களில் சிஎஸ்கே அணி முன்னேற்றம் அடைய வேண்டியதாக இருந்தது.

- Advertisement -

ரன்ரேட் சிறப்பாக இருந்தாலும், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதேபோல் பவுலிங்கில் கம்போஜ் பவுலிங் சிறப்பாக அமைந்தது. அவரிடம் நல்ல மூவ்மண்ட் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த வேகத்தை விடவும் கூடுதல் வேகத்துடன் வருகிறது. பவர் பிளேவில் 3 ஓவர்களை வீசுவது எளிதல்ல. அவர் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.

- Advertisement -

கன்சிஸ்டன்சி முக்கியம்

இளம் வீரர்களை பொறுத்தவரை கன்சிஸ்டன்சி மிகவும் முக்கியம். ஆனால் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைக்கும் போது, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்க கூடாது. 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவோரிடம் கன்சிஸ்டன்சியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களால் ஆட்டத்தின் எந்த சூழல்களிலும் சிக்ஸ் அடிக்க கூடிய திறமை உள்ளது.

அதேபோல் இளம் வீரர்கள் அழுத்தத்தை எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது, அது சிக்கலாக அமைந்துவிடும். அதனை சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை சரியாக கணிக்க வேண்டும். அது ஒன்றுதான் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு என் அட்வைஸ் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles