சொன்னா கேளுங்க கம்பீர்.. ஆஸி தொடர ஜெயிக்க சச்சினை வச்சு இத பண்ணுங்க.. இல்லன்னா அவ்வளவுதான் – முன்னாள் இந்திய வீரர் WV ராமன் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது, எனவே, அனைவரது எதிர்பார்ப்பும் இந்தியாவின் நட்சத்திர பேட்டர்களான ரோகித் மற்றும் விராட் கோலியின் பக்கமே உள்ளது.

- Advertisement -

நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி சொந்த மண்ணிலே டெஸ்ட் தொடரை இழந்தது. அதுமட்டுமில்லாமல், கடந்த 24 ஆண்டு வரலாற்று மைல்கல்லை மாற்றி அமைத்த அணியாக நியூசிலாந்து அணி பதிவு செய்தது.

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோஹித் 6 இன்னிங்ஸ்களில் 91 ரன்களும், கோலி 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்களும் மட்டுமே எடுத்து ஃபார்மிற்காக போராடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன் பிசிசிஐக்கு வலியுறுத்தியுள்ளார்.

ராமனின் வேண்டுகோள்:

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியதாவது “#TeamIndia அணிக்கு #BGT2025 போட்டிக்கான பயிற்சி ஏற்பாடுகளுக்கு #Tendulkar அவர்களை பேட்டிங் ஆலோசகராக நியமிப்பது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்,” என கூறியுள்ளார்.

- Advertisement -

நேரமுள்ளது அவரை மாற்றுங்கள்:

மேலும் அவர் கூறியதாவது, “இப்போது முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே போதுமான நேரம் உள்ளது. இந்த காலகட்டத்தில் ஆலோசகர்களே அழைப்பது சாதாரணமாகிவிட்டது அல்லவா, எனவே அதைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியதுதானா?” என ட்வீட் செய்திருந்தார்.

சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது சாதனையைப் பார்க்கும்போது அனைவரையும் வியர்க்க வைக்கிறது. டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவை 20 டெஸ்ட்களை எதிர்கொண்டு, 6 சதங்களுடன், 1809 ரன்களையும் எடுத்து 53.20 சராசரியை வைத்துள்ளார்.

குறிப்பாக, சச்சின் டெண்டுல்கர் 2003 ஆம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற ஐந்து நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் 241* ரன்களை குவித்தது, கிரிக்கெட் வரலாற்றில் நடந்த அழியா பதிவாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles