WTC புள்ளி பட்டியல்.. முதல் இடத்தை இழந்த இந்திய அணி.. பைனல் போவதில் சிக்கல்.. அதிரடி மாற்றங்கள்

நியூசிலாந்து மற்றும் இந்திய டெஸ்ட் தொடர் முடிவுக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) வரையிலான புள்ளி பட்டியலே வெளியிட்டிருக்கிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பொறுத்தவரை, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஒரு மாதத்துக்கு முன் இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தில் இருந்தது. இச்சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியா நீடிக்கும் என்ற நிலையில் இருந்தது.

- Advertisement -

இதனால், இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியானது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி தோல்வியுற்றது. இதனால் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஒன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலின்படி, ஆஸ்திரேலியா அணியானது 12 போட்டிகளில் 8 வெற்றி 3 தோல்வி 1 டிரா என்ற கணக்கில் 62.50 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்தது. இந்திய அணி 14 போட்டிகளில் 8 வெற்றி 5 தோல்வி 1 டிரா என்ற கணக்கில் 58.33 வெற்றி சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்வி என்ற கணக்கில் 55.56 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், தொடர் வெற்றிக்குப் பிறகு நியூசிலாந்து அணியானது 11 போட்டிகளில் 6 வெற்றி 5 தோல்வி என்ற கணக்கில் 54.55 வெற்றி சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா 8 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்வி 1 டிரா என்ற கணக்கில் 54.17 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles