யாரு பெஸ்ட்? கோலியா பாபரா? வாசிம் அக்ரம் நச் பதில்.. கிரிக்கெட் லெஜன்ட்னா சும்மாவா!

பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி முடிவு பெறுகிறது!

- Advertisement -

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இரண்டு முறை விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் ஒரு போட்டியில் கட்டாயம் மோதிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

இரு நாடுகளும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஐசிசி தொடர்கள் தவிர்த்து நேரடியான தொடர்களில் விளையாடிக் கொள்ளாத காரணத்தினால், இரு நாடுகள் பங்கேற்கும் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்கள் இல்லாமல் மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடமும் பரவலாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு முன்னாள் வீரர்களிடமும் தொற்றிக் கொண்டு உள்ளது. இந்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது மற்ற நாட்டு முன்னாள் வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமகாலத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பேட்ஸ்மேன்களாக விராட் கோலி ஒருபுறத்தில் நீண்ட வருடங்களாகவும், மறுபுறத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சில வருடங்களாகவும் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இதேபோல் வேகப்பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஜஸ்பிரித் காயத்திற்கு முன்பு வரை தனி ஒரு பந்துவீச்சாளராக கோலோச்சி வந்தார். இதற்கு அடுத்து தன்னுடைய பந்துவீச்சில் முன்னேறி வந்த ஷாஹீன் ஷா அப்ரிடி பும்ராவுக்கு இணையாக முன்னேறி இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பழம்பெரும் லெஜன்ட் வாசிம் அக்ரமிடம் விராட் கோலி, பாபர் ஆசம் ஜோடி, பும்ரா ஷாகின் ஷா அப்ரிடி ஜோடி, இதில் யாரை சிறந்தவர்களாக தேர்ந்தெடுப்பிர்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

இதற்கு தைரியமாக பதில் சொல்லி பேசி உள்ள வாசிம் அக்ரம் “இது மிகவும் கடினமான வேலை. இதன் காரணமாகத்தான் நான் தேர்வாளராகவே செல்லவில்லை. இருந்தாலும் கூட பாபர் ஆசமை விட நான் விராட் கோலியை தேர்வு செய்வேன். விராட் கோலி நீண்ட வருடங்களாகசிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாபர் சிறந்த வீரர் சந்தேகம் கிடையாது. அவர் இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும்.

பும்ரா ஷாகின் அப்ரிடியை எடுத்துக் கொண்டால், ஷாகின் அப்ரிடிதான். ஏனென்றால் அவர் ஸ்டார்க்கை ஞாபகப்படுத்தும் இடது கை பந்துவீச்சாளர். இருவரும் விக்கெட்டுக்காக லென்த்தில் மேலே பந்து வீசக்கூடியவர்கள். மேலும் ஷாகின் பேட்டிங்கை மெருகேற்றி ஒன்பதாவது பத்தாவது இடத்தில் வந்து இரண்டு சிக்ஸர்கள் அடிக்கக்கூடியவராக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles