இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டாஸ் சுண்டப்படும் போது நாணயத்தை நோக்கி கேமராக்கள் காட்டப்பட்ட நிகழ்வு சற்று பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த வாரம் மும்பையின் வான்கடை மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாசின் போது நாணயத்தை பின்னோக்கி தலைக்கு மேல் வீசினார். அப்போது அந்த நாணயம் எதிரணி கேப்டன் மற்றும் நடுவர்கள் ஆகியோரை தாண்டி விழுந்தது.
அப்போது போட்டியின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த நாணயத்தை எடுத்து மறுபுறம் திருப்பி வைத்து ஹர்திக் பாண்டியாவிடம் பேசுவது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட ரசிகர்கள் போட்டி முன்னரே மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விவாதங்கள் எழுப்பத் தொடங்கினார்.
பின்னர் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் டாசின் பொழுது டூப்ளசிஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஹர்திக் பாண்டியா நாணயத்தை பின்னோக்கி வீசும் சம்பவம் குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசிஸ் கம்மின்சிடம் விவரிக்கும் காட்சிகள் வெளியானது.
எனவே அதன் உண்மை தன்மையை குறித்து எந்த ஒரு விளக்கமும் வெளிவராத நிலையில், இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது டாஸ் சுண்டப்பட்ட நாணயத்தை நோக்கி கேமராக்கள் நகர்ந்து அது பார்வையாளர்கள் அனைவருக்கும் தெளிவாக காட்டியது.
எனவே இது போன்ற இன்னொரு சம்பவம் நடைபெறாமல் இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது நடுநிலையை உணர்த்தும் வகையில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. எனவே இதே போன்று இனி வரும் அடுத்த போட்டிகளிலும் டாஸ் சுண்டப்பட்ட நாணயத்தின் மீது கேமராக்கள் காட்டப்படுமா? என்பதை பின்வரும் போட்டிகளில் பார்க்கலாம்.
இதையும் படிங்க:தோனியை என்னால சம்மதிக்க வைக்க முடியாது.. ஆனா நான் சொன்னா தினேஷ் கார்த்திக் கேட்பாரு.. ரோகித் சர்மா ருசிகர தகவல்
இந்த சம்பவம் குறித்து தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது ஒரு நல்ல முயற்சி என்றும், சமூக வலைதளங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடுவர் உண்மையாகவே அந்த நாணயத்தை மறுபுறம் திருப்பினாரா? இல்லையா? என்பது குறித்து உண்மையான தகவல் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும் பிசிசிஐ தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவு வரும் காலங்களில் இனி தவறுகள் நிகழாமல் இருப்பதற்கு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

