தோனியை என்னால சம்மதிக்க வைக்க முடியாது.. ஆனா நான் சொன்னா தினேஷ் கார்த்திக் கேட்பாரு.. ரோகித் சர்மா ருசிகர தகவல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா டி20 உலக கோப்பை குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் ஒரு விஷயத்தில் மகேந்திர சிங் தோனியை தன்னால் சம்மதிக்க வைக்க முடியாது என்றும், தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

17 வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ரோஹித் சர்மா தற்போது இந்த ஐபிஎல் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும், ஒரு வீரராக தன்னால் என்ன செய்ய முடியுமோ அதனை நூறு சதவீதம் அணிக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அபார சதம் விளாசி தனது பேட்டிங் ஃபார்மை உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் மிகச் சிறப்பாக மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வியும், இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இனி வரும் போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் பாட் கேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மாவிடம் தோனி குறித்து கேட்கப்பட்ட போது
“கடந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி நான்கு பந்துகளில் விளாசிய 20 ரன்கள்தான் சென்னை அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. என்னால் மகேந்திர சிங் தோனியை சம்மதிக்க வைத்து உலகக் கோப்பையில் விளையாட வைக்க முடியாது.

- Advertisement -

ஆனால் தினேஷ் கார்த்திக் விளையாட வைக்க முடியும்.
சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீது அழுத்தத்தை இறக்குவதற்காகவே டி20 உலக கோப்பை நெருங்கி வருவதை குறிப்பிட்டேன். தினேஷ் கார்த்திக் மிகவும் சிறப்பாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

இதையும் படிங்க:இம்பாக்ட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை.. கிரிக்கெட்டின் முக்கிய அம்சமே பாதிக்கப்படுகிறது.. ரோஹித் சர்மா விமர்சனம்

மகேந்திர சிங் தோனி டி20 உலக கோப்பை நடக்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ்க்கு வர மாட்டார். ஆனால் அமெரிக்காவிற்கு கோல்ப் விளையாடுவதற்காக கண்டிப்பாக வருவார். தற்போது கோல்ப் விளையாட்டின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles