ஐபிஎல் 2024 சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் என்னும் விதிமுறை எந்த அளவு ஆதரவை பெற்றதோ அதே அளவு எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுவாரசியத்தை கூட்டுவதற்காக கடந்த ஆண்டு இம்பேக்ட் பிளேயர் என்னும் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதிமுறையின்படி ஒரு வீரரை பேட்டிங்கின் போதோ அல்லது பவுலிங்கின் போதோ அணியில் உள்ள வீரருக்கு மாற்றுவீராக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது ஒரு அணி பேட்டிங் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது ஒரு பந்து வீச்சாளருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை களம் இறக்கி பேட்டிங் செய்ய வைக்கலாம். அல்லது பந்துவீச்சில் அணியின் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒரு பந்துவீச்சாளரை களம் இறக்கலாம்.
11 வீரர்கள் கொண்ட டி20 கிரிக்கெட் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 12 வீரர்கள் கொண்ட அணியாக மாறி உள்ளது. எனினும் இது உள்ளூர் தொடருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசத் தொடர்களுக்கு இந்த விதிமுறை செல்லாது. இந்த விதிமுறை குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ், இம்பெக்ட் பிளேயர் விதியால் ஒரு அணி 160 ரன்கள் குவித்தால் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்விதான் அடைய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் தற்போதைய கேப்டனுமான ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து தனது பார்வையை முன் வைத்திருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“இம்பாட் பிளேயர் விதிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு கிரிக்கெட் போட்டி என்பது பதினோரு வீரர்களை மட்டுமே உள்ளடக்கியதே தவிர 12 வீரர்கள் கொண்டது இல்லை.
ரசிகர்களின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக போட்டியின் முக்கிய அம்சமே இங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விதிமுறையால் சிவம் தூபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்களுக்கு பந்து வீச வாய்ப்புகள் கிடைப்பதில்லை” என்று கூறியிருக்கிறார். சென்னை அணியில் விளையாடி வரும் சிவம் துபே இம்பாக்ட் பிளேயர் விதிமுறையால் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தம்பி முஸ்தபிசுர் உடனே கிளம்பி வா.. சிஎஸ்கே – ல ஒரு பிரயோஜனம் இல்லை.. பங்களாதேஷ் நிர்வாகி சர்ச்சை
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டும் டி20 கிரிக்கெட் இன் சுவாரசியத்தை கூட்டுவதற்காக ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் என்னும் விதிமுறை டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்காமல் பந்துவீச்சாளருக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சீசனில் 200க்கும் மேற்பட்ட ரன்களை சர்வ சாதாரணமாக ஐபிஎல் அணிகள் அடித்தது வருவது குறிப்பிடத்தக்கது.

