“ டெஸ்ட் கேப்டனாக இருக்க ரோஹித் சர்மாவுக்கு என்ன தகுதி இருக்கு.. வெளிநாட்டில் என்ன… ” பயங்கரமாக தாக்கியுள்ள பத்ரிநாத்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் தற்போது டெஸ்ட் சீரிஸ் ஆடி.வருகிறது. இதில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியை தழுவியது. இதன் விளைவாக நாலாப் பக்கமும் பயங்கரமான குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

- Advertisement -

இந்த ஆண்டு ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஆஸ்திரேலியா அணியிடம் இழந்தது. புதிய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை ரவி சாஸ்திரி, பத்ரிநாத் உள்ளிட்டோர் பலமாக தாக்கியிள்ளனர். அண்மையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், ஒப்பனர் ரோகித் ஷர்மா என்ன சாதித்துவிட்டார் என அவரைக் கேப்டனாக தொடர்கிறார்கள் என கேள்வியை எழுப்பியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ விராட் கோலி தான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருக்க வேண்டும். விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே ஒப்பீடே தேவையில்லை, கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை மிகப் பெரிய ஆட்டக்காரர். இந்தியாவுக்கு வெளியே ரோஹித் ஒரு துவக்க வீரராக என்ன செய்துள்ளார் ? அவர் அணியிலயே இருக்கக் கூடாது. ”

- Advertisement -

ரோஹித் ஷர்மா இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். இதில் இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக 2 – 0, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 – 1 மற்றும் வெளிநாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1 – 0 என்ற நிலையில் வென்றுள்ளார். சேனா மைதானங்களில் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி, தற்போது தென்னாபிரிக்கா அங்கு எதிராக இன்னிங்ஸ் படுதோல்வி. மேலும் வெளிநாட்டில் பேட்டிங்கில் சுமாரான ஆட்டம், இங்கிலாந்தில் ஒரு அதிரடி சதம் மட்டுமே பெரிய அளவில் இருக்கிறது.

எம்.எஸ்.தோனி சென்ற பிறகு இளம் வீரராக டெஸ்ட் கேப்டன் பொறுப்பை எடுத்த விராட் கோலி, இந்திய அணியில் இயாக இருந்த வேகப்பந்துவீச்சை மேம்படுத்தினார். 7வது இடத்தில் இருந்த இந்திய அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்து வந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் கவாஸ்கர் ட்ராபி, இங்கிலாந்தில் டெஸ்ட் சீரிஸ் என அடுத்தடுத்து ஆதிக்கத்தை செலுத்தினார்.

- Advertisement -

அவரது பெயருக்கு பின்னால் தோல்வி கிடைத்தாலும் அது படுதோல்வி அளவாக இருக்காது. ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்பி அணுகினார். அவர் போன பிறகு அடுத்தடுத்து இந்திய அணி தடுமாறுவது மூலம் மீண்டும் 2014 அணியைப் போல ஆகிவிடுமோ என சிலர் அச்சப்படுகின்றனர்.

ரோஹித் ஷர்மா இனி தான் வெளிநாட்டு மைதானங்களில் தலைமை பொறுப்பில் விளையாடவுள்ளார். அதனால் அவரின் கேப்டன்சியை இப்போதே ஓரிரு தோல்விகளின் மூலம் தீர்மானம் செய்துவிட முடியாது. எனினும் விமர்சனங்கள் கடுமையாக வந்தாலும் எடுத்துக் கொள்ள தான் வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles