ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.
ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
சிறப்பாக ஆடிய டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். இந்த தோல்வி காரணமாக பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களில் நிறைவு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் போது, பஞ்சாப் அணி வீரர்கள் நிர்ணயித்த ஸ்கோர் நிச்சயம் சிறப்பானது.
இந்த பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் மாறிக் கொண்டே இருந்தது. ஆனால் சராசரிக்கும் அதிகமான ஸ்கோரை அடித்திருந்தோம். ஆனால் பவுலிங்கில் சரியான லெந்தில் வீசவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல் பவுன்சர் பந்துகளையும் அதிகளவில் வீசவில்லை. ஹார்ட் லெந்தில் வீசி இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் எந்த வீரர் என்ன செய்வார் என்று தெரியாது.
விரலில் காயம்?
பிரீமியர் லீக் தொடரை விடவும் ஐபிஎல் தொடர் பெரியது. எந்த சூழலில் பாசிட்டிவ் மனநிலையுடன் இருக்க வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், அடுத்த போட்டிக்கு புதிய மனிதனாக வந்து நிற்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த தோல்விக்கு பின் மீண்டும் எங்கு தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும்.
நிச்சயமாக அடுத்தப் போட்டியில் மிகப்பெரிய திட்டங்களுடன் வருவோம். விரலில் ஏற்பட்ட காயம் அடுத்தப் போட்டிக்குள் சரியாகவிடும். அதனை பற்றி கவலை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த போட்டிக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் தோல்வியால் அதிருப்தி அடைந்தது ரசிகர்களுக்கு கண்கூடாக தெரிந்தது.

