103 ரன்களால் ஏமாற்றம் இல்லை.. இது எங்களின் நாளாக அமையவில்லை.. தோனி பேட்டி

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

இதனால் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்வியை பெற்று மோசமான சாதனையை படைத்திருக்கிறது. இந்த தோல்விக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசும் போது, சில நேரங்களில் நமது எண்ணத்திற்கு எதிராக முற்றிலும் மாறான வழியில் சென்றுவிடும். நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு ஒவ்வொரு போட்டியும் வெல்வது சவால் நிறைந்த ஒன்றுதான்.

- Advertisement -

தோனி பேட்டி

அந்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. இது ஒவ்வொரு ஆட்டத்திலும் தொடர்ந்து வருகிறது. நாங்கள் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் போது, பிட்சில் பந்து நின்று வருகிறது. அதுவே முதல் பேட்டிங் ஆடினாலும் பந்து நின்று மொத்தமான மாறிவிடுகிறது.

- Advertisement -

பவர் பிளேவில் சில விக்கெட்டுகளை இழந்தால், அழுத்தம் அதிகமாக இருக்கும். அதிலும் கேகேஆர் அணியில் தரமான ஸ்பின்னர்கள் இருக்கும் போது கூடுதல் சிரமம் ஏற்பட்டது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிர்பார்த்த பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. அது அமைந்தால் சரியாக இருக்கும். பவர் பிளேவில் சொதப்புவது பற்றி பெரிய கவலை கிடையாது.

பேட்டிங் சிக்கல்

ஏனென்றால் சூழல் முக்கியம். அதேபோல் சில போட்டிகளில் நாங்கள் நன்றாக ஆடி இருக்கிறோம். நாங்கள் மற்ற அணிகளுடன் எங்களின் வீரர்களை ஒப்பிட மாட்டோம். எங்களிடம் சிறந்த தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள். தரமான ஷாட்களை விளையாடக் கூடியவர்கள். தாறுமாறாக சிக்சர்களை, அக்ராஸ் லைன் ஆடக் கூடியவர்களோ இல்லை.

- Advertisement -

அதேபோல் ஸ்கோரினை பார்த்து பெரிதாக ஏமாற்றம் அடையக் கூடாது. பவர் பிளே ஓவர்களில் 60 ரன்களை அடிக்க வேண்டும் என்று பார்க்க கூடாது. அது கடினமாக மாறிவிடும். பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி, கடைசி ஓவர்களில் ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை தொடக்க வீரர்கள் ஏமாற்றினால், மிடில் ஆர்டர் வேறு மாதிரி ரன்கள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles