தனியா உட்காந்து பொலம்பிட்டு இருக்க முடியாது.. அத மாத்தணும்.. பிசிசிஐ புதிய விதியை கடுமையாக விமர்சித்த கோலி

2025 ஆம் வருடத்தின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் ஐபிஎல் அணிகளின் நட்சத்திர வீரர்களும் தங்கள் அணியுடன் இணைய தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நேற்று பெங்களூர் அணியுடன் இணைந்தார்.

- Advertisement -

கடந்த 2023 ஆம் வருடம் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோலி கடந்த 2 வருடங்களாக ஆர்சிபி அணியில் வீரராக மட்டுமே விளையாடி வருகிறார். இந்த வருட ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணியின் கேப்டன் டுப்ளேசிஸ் ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து பெங்களூர் அணியின் வீரர் பட்டிதார் அந்த அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஆர்சிபி அணியுடன் இணைந்த விராட் கோலி அந்த அணி சார்பாக நடத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனது எதிர்காலம் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கையில் சமீபத்தில் சந்தித்த ஏற்ற, இறக்கங்கள் ஆகியவற்றையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசிய விராட் கோலி, அதனை தனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தொடர்களில் ஒன்று என குறிப்பிட்டார்.

- Advertisement -

மேலும் 2028 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெற்றிருப்பதால் மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடுவீர்களா.? என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விராட் கோலி தங்கப்பதக்கம் வாங்குவதற்காக ஒரு சில போட்டிகளில் மீண்டும் வந்து விளையாடும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த மனநிலையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர் இனி வர இருக்கின்ற போட்டிகளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கடுமையான சூழலை எதிர்கொள்ளும் நேரத்தில் அவர்கள் குடும்பத்துடன் இருப்பது அவசியமானது என விராட் கோலி தெரிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து வீரர்களுக்கு பிசிசிஐ நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வீரர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த புதிய விதியின் அடிப்படையில் 45 நாட்கள் கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதல் 2 வாரங்களுக்கு வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் தங்க முடியாது. இது தொடர்பாக பேசியிருக்கும் விராட் கோலி கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவர்களுடன் தங்கியிருப்பது வீரர்களின் மன நிலைக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு வீரர் கடினமான சூழலை எதிர்கொள்ளும் போது அறையில் தனியாக அமர்ந்து அதனை நினைத்து வருத்தப்படுவதை விரும்ப மாட்டார் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆர்சிபி நிகழ்ச்சியில் அளித்த பேட்டியின் மூலம் பிசிசிஐ சமீபத்தில் விதித்த கடுமையான விதிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை விராட் கோலி வெளிப்படுத்தி இருக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles