ஏலத்தில் மீண்டும் எடுக்காத கடுப்பா ?‍ தோனி மற்றும் சென்னை அணியிடம் நக்கல் செய்து வம்பிழுத்த தீபக் சஹர் – வீடியோ இணைப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையேயான எல் – கிளாசிக்கோ போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 2 புள்ளிகளைத் தட்டிச் சென்றது. இப்போட்டியில் முன்னாள் சென்னை வீரரான தீபக் சஹர் வேண்டுமென்ற நக்கல் செய்து போட்டியை விறுவிறுப்பாக்கினார்.

- Advertisement -

2018 முதல் 2024 வரை 6 ஆண்டுகள் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக தீபக் சஹர் திகழ்ந்தார். மெகா எஏலத்தில் மீண்டும் அவரை எடுக்க முயற்சி செய்த போதிலும் இறுதிவரை விடாப்பிடியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி 9.25 கோடிகளுக்கு தீபக் சஹரை வாங்கியது. இன்று முதல் முறையாக சென்னை அணிக்கு எதிராக களமிறங்கினார். மேலும் இதே போல 6 ஆண்டுகள் சென்னை அணியுடன் பயணித்த மிட்செல் சான்ட்னரும் மும்பையில் இன்று விளையாடினார்.

- Advertisement -

போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடி இறுதியில் மும்பை அணி ஓரளவு சுமாரான ஸ்கோரை எட்ட உதவினார். 15 பந்துகளில் தீபக் சஹர் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் என 28 ரன்கள் விளாசினார். ஒவ்வொரு பவுண்டரி/சிக்ஸ் அடித்தப் பிறகும், சென்னை அணியையும் ரசிகர்களையும் வெறுப்பேற்றும் வகையில் கத்தி கொண்டாடினார். அதன் பின்னர் பவுலிங்கில் அவரது முதல் ஓவரிலயே திரிப்பபாத்தியின் விக்கெட்டை எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில், சென்னை அணி விடுவித்த கோபத்தில் தான் சஹர் இவ்வாறு செய்கிறார் என நினைத்து ரசிகர்கள் கடுப்பாகி, அவரை சமூக வலைத்தளத்தில் திட்டத் துவங்கினார். இறுதியில், தோனி பேட்டிங் செய்ய வந்த போது அவரை ஸ்லெட்ஞ் செய்து நக்கலாக நின்றார். அனைத்தையும் கண்ட தோனி, எதுவும் கண்டுகாமல் அமைதியாகச் சென்றார். வெற்றிப் பெற்றப் பிறகு இரு அணி வீரர்களும் கைக் குலுக்கும் போது, தோனி பேட்டை வைத்து சஹரை செல்லமாக தட்டினார். உண்மையில், சஹர் போட்டி முழுவதும் வேண்டுமென்றே விளையாட்டுக்காக மட்டுமே இவ்வாறு நக்கல் செய்தார் என்பது உறுதியானது.

தோனியும் தீபக் சஹரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது அறிந்தது தான். பல முறை சென்னை அணியில், தோனி விளையாட்டாக சஹரிடம் நக்கல் செய்ததை பார்த்திருப்போம். தற்போது அணி மாறியுள்ள சஹர், விளையாட்டாக சென்னை அணிக்கு எதிராக நக்கல் செய்துள்ளார். வேறு அணிக்கே சென்றாலும் பாசம் மாறாது அல்லவா.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles