பாவம் ருத்துராஜ்.. தோனி ரிட்டையர்டு ஆகிருக்கணும்.. சிஎஸ்கேக்கு நல்லது.. வாசிம் ஜாபர் சர்ச்சை கருத்து

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக 16 ஆண்டுகள் நடைபெற்று தற்போது 17வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. பத்து அணிகள் பங்குபெறும் இந்தத் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

- Advertisement -

இதன் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதுகின்றன. இப்போட்டியைக் காண மைதானத்திற்கு ரசிகர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன் பொறுப்பை வழங்கினார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கும், தற்போது வயது 42 ஆகிவிட்டதால் அடுத்த சீசனிலும் அவர் இதே உடற் தகுதியுடன் பங்கு பெற முடியுமா? என்பது சந்தேகமே. இதனால் மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவது குறித்து முடிவெடுத்து விட்டதாக ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

எனவே தோனி இந்த சீசன் முழுவதும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகவே களமிறங்கப் போகிறார். 2008ம் ஆண்டு சென்னை அணிக்கு அறிமுகமான இவர் 2023ம் ஆண்டு வரை விளையாடி ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் இருக்கிறார். எனவே இவருக்கு இது கடைசி தொடராக இருக்கும் என்பதால் ரசிகர்கள் தோனியைக் காண மைதானத்திற்கு ஆவலுடன் வருகின்றனர்.

எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனின் தலைமையில் இந்த முறை களமிறங்க போகிறது. அவரின் கேப்டன்சி தலைமைத்துவம் எப்படி இருக்கும், கடினமான சூழ்நிலைகளில் அவர் எவ்வாறு செயல்பட போகிறார் மற்றும் அணி வீரர்களை அவர் எவ்வாறு வழிநடத்துகிறார்? போன்றவற்றைக்கான ஆர்வமாக இருக்கும் நிலையில் மகேந்திர சிங் தோனி இந்த தொடரில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து வாஷிம் ஜாபர் கூறும் பொழுது

- Advertisement -

“மகேந்திர சிங் தோனி முடிவெடுத்தது சரியான முடிவு இல்லை என்று நான் நினைக்கிறேன். மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதோடு தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர் ஓய்வு பெற்றிருந்தால் இந்தத் தொடரில் நல்ல பலன் சென்னை அணிக்குக் கிடைத்திருக்கும். தோனி ஓய்வு பெற்று போட்டியின் அருகில் இல்லாமல் இருப்பதே புதிய கேப்டன்களின் சூழ்நிலையை மிகவும் எளிதாகும்.

தற்போது மகேந்திர சிங் தோனி அருகில் இருப்பதால் புதிய கேப்டன் எந்த முடிவையும் எடுக்க சற்று கடினமாக இருக்கும். தன்னிச்சையாக செயல்பட முடியாது. எனவே தோனி ஓய்வு பெற்றிருந்தால் மட்டுமே ருத்ராஜால் தன்னிச்சையாக செயல்பட முடியும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles