2008 ஐபிஎல் முதல்.. டில்லி வீரர் விராட் கோலியை ஏன் டெல்லி அணிக்காக வாங்கவில்லை என்பதற்கான காரணம் இதுதான்.. முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் பேட்டி

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஐபிஎல்லின் தொடக்கத்திலேயே ஏன் விராட் கோலி வாங்கவில்லை என்பதற்கான காரணம் குறித்து டெல்லி கேப்பிட்டல் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லியை பூர்வீகமாக கொண்ட விராட் கோலி கடந்த 17 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருவது மட்டுமல்லாமல் தற்போது பதினெட்டாவது ஆண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இக்கட்டான சூழ்நிலைகளில் பெங்களூரு அணிக்காக மிகச்சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் கடைசி வரை களத்தில் நின்று ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறார். மேலும் இவர் இந்திய அணிக்காக படைத்த சாதனைகள் குறித்து யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட விராட் கோலி, கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து எதற்காக விராட் கோலி வாங்கப்படவில்லை என்பது குறித்து அப்போதைய முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார். இவர் ஏற்கனவே டெல்லி அணிக்காக கேப்டனாக செயல்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ஷேவாக் கூறும்போது “2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எங்கள் அணியில் நிறைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். தவான், கம்பீர், தில்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் எங்கள் அணியில் இருந்தார்கள். அவர்களைத் தவிர மேலும் ஒரு கூடுதலாக ஏபி டிவில்லியர்ஸ் எங்கள் அணியில் இருந்தார். அப்போது விராட் கோலி போன்ற ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எங்கள் அணியில் தேவை இல்லாமல் இருந்தது. எனவே அப்போது அவருக்கு பதிலாக பந்துவீச்சாளர்கள் தேவைப்பட்டனர்.

- Advertisement -

இதையும் படிங்க:டெல்லியை பழிதீர்த்த ஆர்சிபி.. புள்ளிப் பட்டியலிலும் டாப்.. குர்ணால் பாண்டியா கொடுத்த அதிர்ச்சி

அந்த சமயத்தில் தான் விராட் கோலிக்கு பதிலாக நாங்கள் பிரதீப் சங்வானை தேர்ந்தெடுத்தோம். மேலும் அந்த ஆண்டு நாங்கள் தேர்வு செய்த பிரதீப் மற்றும் யோ மகேஷ் ஆகியோர் எங்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்கள்” என வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார். அந்த ஆண்டு டெல்லி அணி சிறப்பாக செயல்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டது. இன்னும் 18 ஆண்டுகளில் டெல்லி அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. இருப்பினும் அந்தக் குறையை இந்த வருடம் போக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles