நேற்று டெல்லி அணி 264 ரன்கள் குவித்தும் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முக்கிய நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கருண் நாயர் தவறவிட்டார். இதுகுறித்து வீரேந்தர் சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 62 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் இருந்தார். அந்த நேரத்தில் அவருடைய விக்கெட் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு பந்துகளில் எளிய கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அதை கருண் நாயர் மிகவும் மோசமான முறையில் தவறவிட்டார்.
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது “கருண் நாயர் நான் இதை வருத்தத்துடன் சொல்கிறேன். உங்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. பீல்டிங் செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் முக்கியமான நேரத்தில் அதை தவற விட்டு உங்கள் அணி தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டீர்கள். உங்கள் கேப்டன் நிச்சயம் இதை மனதில் வைத்து உங்களுக்கு விளையாட வாய்ப்பு தர மாட்டார்”
“நான் கேப்டனாக இருந்தாலும் நிச்சயம் வாய்ப்பு கொடுக்க மாட்டேன். நீங்கள் என்னிடம் வந்து வாய்ப்பு கேட்கும் பொழுது நீங்கள் தவறவிட்ட கேட்ச் பற்றி உங்களிடம் சொல்லி அதனால்தான் வாய்ப்பு தரவில்லை என்று கூறுவேன். அப்போது நீங்கள் என்னிடம் சொல்வதற்கு எந்த பதிலும் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.

