கம்பீர் அகர்கர் இதை சொல்லாம ரோகித் இந்த முடிவை எடுக்க மாட்டார்.. அவருக்கு என்னமோ நடந்திருக்கு.. விரேந்திர சேவாக் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து சென்று அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் ரோகித் சர்மா நேற்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரோகித் சர்மா ஏன் அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்று பும்ரா அணியை வழி நடத்தினார். இந்த சூழ்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலக மாட்டேன் எனவும் தொடர்ந்து விளையாட திட்டமிட்டு இருப்பதாகவும் ரோகித் சர்மா ஏற்கனவே கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக நேற்று திடீரென அறிவிக்கப்பட்ட அவரது ஓய்வு சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இருந்தாலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி பெற்று தன் மீது ஏற்பட்ட கலங்கத்தை நீக்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இது குறித்து வீரேந்திர சேவாக் கூறும்போது “ரோகித் சர்மாவின் இந்த முடிவு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா எப்படி தயாராகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக இருந்தேன். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினாலும் நான் எங்கேயும் செல்லவில்லை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:வைபவ் அரோரா வீசிய ஒரு ஓவர்.. ரகுவன்ஷி மிஸ் செய்த கேட்ச்.. கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? ரஹானே சொன்ன வார்த்தை

இதற்கு இடையில் என்ன நடந்திருக்கலாம் ஒருவேளை அவரை இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யவில்லை என்றோ அல்லது கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்தோ அவரிடம் கலந்து பேசி இருக்கலாம். இதனால்தான் ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்னும் சில போட்டிகள் விளையாடி இருக்கலாம் என்று ரோகித் மனதிற்குள் தோன்றியிருக்கும். ஏனென்றால் 100 டெஸ்ட் போட்டிகள் என்பது உயர் அடுக்கு வீரர்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார்கள். எனவே அந்த சாதனையை ரோகித் சர்மாவும் படைக்க விரும்பி இருக்கலாம். இருப்பினும் அவர் புத்திசாலித்தனமான முடிவைத்தான் தற்போது எடுத்திருக்கிறார்” என சேவாக் கூறுகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles