வேற லெவல்… இதெல்லாம் பார்த்தாலே தெரியுது ஆர்சிபி புது கேப்டன் இவர்தான்னு.. சும்மா பட்டையை கிளப்ப போறாங்க – அஸ்வின் பேட்டி

ஐபிஎல் 2025 ஆம் வருட தொடருக்கான ஏலம் கடந்த வாரம் நடந்து முடிந்தது. கடந்த சீசனில் ஒரு அணிக்காக விளையாடிய பல்வேறு வீரர்களும் இந்த முறை வேறு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். மேலும் பல அணிகளை வழி நடத்திய கேப்டன்களும் தங்களது அணி நிர்வாகத்தால் ரிலீஸ் செய்யப்பட்டதால் மற்ற அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2025 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியை இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி வழிநடத்துவார் என இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. கடந்த 17 வருடங்களாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வர இருக்கின்ற ஐபிஎல் சீசனில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூர் அணியின் நிர்வாகம் சிறப்பான வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடர்களில் அந்த அணியின் பலவீனமாக விளங்கிய பந்துவீச்சு துறையையும் தற்போது பலப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி இந்திய அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேக பந்துவீச்சாளர் ஜாஸ் ஹேசல்வுட் ஆகியோரை ஏலத்தில் எடுத்திருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டன் இந்த முறை ஆர்சிபி அணிக்கு விளையாட இருக்கிறார். இவர்களைத் தவிர சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியாவையும் பெங்களூர் அணி விலைக்கு வாங்கி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய காஷ்மீரை சேர்ந்த ராசிக் சலாம் தார் மற்றும் இலங்கை அணியின் நுவான் துஷாரா போன்ற இளம் வீரர்களும் பெங்களுர் அணியால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் தங்களது பந்து வீச்சு மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இருந்த குறைகளை ஆர்சிபி அணி சிறப்பாக சரி செய்திருக்கிறது என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆர்சிபி அணியின் வீரர்கள் தேர்வை வைத்து பார்க்கும் போது வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும் அதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின் வர இருக்கின்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெங்களூர் அணியை வழிநடத்துவார் என தெரிவித்திருக்கிறார். மேலும் பெங்களூர் அணியில் விராட் கோலியை தவிர வழி நடத்துவதற்கான வீரர்கள் இருப்பதாக தனக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக விரிவாக பேசிய அஸ்வின், 2025 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியை விராட் கோலி வழிநடத்துவார் என நினைக்கிறேன். அவரை தவிர வேறு வீரர்கள் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. எனவே விராட் கோலி பெங்களூர் அணியை வழிநடத்துவார் என்று உறுதியாக கூறலாம் என தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி 2025 ஆம் வருட ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்த இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் விராட் கோலி அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பெங்களூர் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்த இருப்பதாக தெரிவித்ததாகவும் அந்த செய்திகளில் வெளியாகி இருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles