பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி இல்லாமல் விளையாடும் இந்திய அணி.!

உலகக் கோப்பை பயிற்சி போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியிலிருந்து திடீரென விராட் கோலி விலகியுள்ளார். அதற்கான காரணங்கள் என்னவென்பதை பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்குகிறது. உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்தடைந்து தங்களது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே அணிகளுக்கு இடையே பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியை நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவதாக இருந்தது. துரதிஷ்டவசமாக கடும் மழை காரணமாக போட்டி நடைபெறாமலே போனது. இந்நிலையில் இரண்டாவது போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் உலக கோப்பைக்கு தகுதி ஆட்டம் மூலம் தகுதி பெற்ற நெதர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணியினர் கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் வந்திருக்கின்றனர்.

இந்திய அணியுடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி பயணிக்கவில்லை. சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து அறிவிப்புகள் தற்போது வரை பிசிசிஐ தரப்பிலிருந்தும் இந்திய அணியின் தரப்பில் இருந்தும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் குழப்பத்திற்கு உண்டாகியுள்ளனர்.

- Advertisement -

திருவனந்தபுரத்தில் இந்திய அணி விளையாடும் பயிற்சி ஆட்டத்தின் போதும் மழை குறுக்கீடு இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பயிற்சி ஆட்டங்கள் பெரும்பாலும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு வருவதால் முக்கியமான உலகக்கோப்பை போட்டிகளும் மழையில் பாதிக்கப்படுமா? என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது குறித்தும் பிசிசிஐ மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது

வருகிற உலககோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வருகிற அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles