கோலி இல்லாம இந்த விஷயத்தை உங்களால பண்ணவே முடியாது.. அவரை எப்படி கழட்டி விடணும்னுதான் பாக்குறீங்க.. கோலி குறித்து ரிக்கி பாண்டிங்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அங்குள்ள சூழ்நிலை இங்கிருக்கும் சூழ்நிலையை விட ரொம்பவே வித்தியாசமானது.

- Advertisement -

மேலும் ஆடுகளத்தைத் தயார் செய்ய ஆஸ்திரேலியாவில் இருந்து மண் கொண்டுவரப்படுவதால் சற்று கலவையான சூழ்நிலையிலேயே அனைத்து அணிகளும் உலகக் கோப்பை விளையாட வேண்டி இருக்கும். இந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பையில் விளையாட போகும் அணியை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்தது.

- Advertisement -

அத்தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில்தான் தேர்வானார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மெதுவாக உள்ளது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற ஆடுகளத்தில் செட்டாக மாட்டார் என்பது போன்ற விமர்சனங்கள் இருந்தது. இருப்பினும் விராட் கோலி இந்தியா மட்டுமின்றி அனைத்து உலக நாடுகளிலும் விளையாடி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் வேண்டுமென்ற ஏதாவது ஒரு காரணத்தை கூறி விராட் கோலியைக் கழட்டிவிட பார்க்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். வருகிற உலகக் கோப்பையில் விராட் கோலி போன்ற தரமான வீரர் ரோகித் சர்மா உடன் ஓப்பனிங் களமிறங்கி விளையாட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து விரிவாக ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது
“இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக்குழு வாரியம் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்திருக்கிறது. இதனால் அவர்கள் ஜெய்ஸ்வாலை ஓபனிங் களம் இறக்குவது என முடிவு செய்திருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவுடன் கோலியை ஓபனிங் களமிறக்குவார்கள் என்று நம்புகிறேன். கோலியைப் பற்றி கூற வேடிக்கையான ஒரு விஷயம் உள்ளது.

- Advertisement -

இந்தியாவில் உள்ள மக்கள் எப்போதுமே விராட் கோலியைக் கழட்டி விடுவதற்கான ஏதேனும் ஒரு காரணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் இந்தியா முதல் ஆளாக விராட் கோலியைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் விராட் கோலி ஒருபுறம் நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாட, அவரைச் சுற்றி அதிக ஸ்டைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அவர்களது வழியில் விளையாட வேண்டும்.

இதையும் படிங்க:விராட் கோலிக்கு காத்திருக்கும் ஆப்பு.. பிளே ஆப்னாலே கோலிக்கு ஆகாது போல.. இதுல எங்க கப் வாங்குறது.. கூறும் புள்ளிவிபரம்

ஐசிசி இணையதளத்தில் இது மட்டுமில்லாமல் விராட் கோலி குறித்த சில விஷயங்களை பேசி இருக்கிறேன். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விராட் கோலி போன்ற தரமான வீரர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்கள். கிளாஸ் மற்றும் அனுபவத்தை வைத்து உங்களால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம்” என்று பாண்டிங் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles