டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலியை கழட்டி விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாடியும், விராட் கோலிக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் முடிவுற்றவுடன், சில வாரங்களில் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற உள்ளது. இதற்குப் பயிற்சி பெறும் தொடராக அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் மிகத் தீவிர பயிற்சியில் ஐபிஎல்லில் கலந்துகொள்ள ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராத் கோலியை டி20 உலக கோப்பை தொடரில் கழற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன.
காரணம் வெஸ்ட் இண்டிஸ் போன்ற வெளிநாட்டு ஆடுகளங்களின் தன்மை மெதுவாக இருக்கும் என்பதால், நிலையாக நின்று மெதுவாக ஆரம்பிக்கும் விராட் கோலியின் ஸ்டைல் அந்த சூழ்நிலைக்கு பொருந்தாது என்று அஜித் அகர்க்கர் தலைமையில் ஆன தேர்வுக் குழுவினர் கருதுகின்றனர். எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கொண்ட அணியை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணியை ஒற்றை ஆளாக நின்று இந்திய அணிக்கு வென்று கொடுத்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் அப்போட்டியைக் கண்டுமா? விராட் கோலி தரம் குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர் என்று ரசிகர்கள் ஆவேசம் அடைந்து வருகின்றனர். மேலும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னை ஏற்கனவே நிரூபித்தவர் எனவே அவர் இந்த உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியைக் கழற்றி விட நினைப்பவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள் என்று விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முகமது இர்ஃபான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்
“விராட் கோலி இன்றி இரண்டாவது யோசனை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அவர் இல்லாமல் ஒரு இந்திய அணியை உருவாக்க முடியாது. அவர் ஒரு சிறந்த தரமான பேட்ஸ்மேன். கடந்த உலக கோப்பையில் ஒற்றை ஆளாக நின்று 3 முதல் 4 போட்டிகளில் இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். அவர் அப்போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால் சொந்த மண்ணிலேயே இந்திய அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்து நாக் அவுட் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கும். எனவே அவரின் தரம் குறிப்பு கேள்வி எழுப்பவர்கள் தெருவோரக் கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள் என்று பிசிசிஐ சாடும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

