எம்எஸ் தோனி இல்லை.. நான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளக்கூடிய நபர் இவர்தான் – விராட் கோலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிகவும் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள கூடிய அளவுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் நட்பு கொண்ட வீரர் யார் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு ஆரம்ப காலகட்டத்தில் யுவராஜ் சிங் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். அதற்குப் பிறகு கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தபோது அவருடன் விராட் கோலி மிகவும் நட்பாக காணப்பட்டார். பின்னர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது ஏபி டிவில்லியர்ஸ் உடன் நெருங்கிய நட்ப வட்டாரத்தில் இருந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனக்கு மெசேஜ் அனுப்பி ஆறுதல் கூறிய ஒரே நபர் எம்.எஸ். தோனி தான் என்று பேசி இருந்தார். இதிலிருந்து எம் எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது என்று தெரிய வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு பேட்டியில் மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட விராட் கோலி தான் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே நபராக கிரிக்கெட் வட்டாரத்தில் இஷாந்த் சர்மா மட்டுமே இருக்கிறார் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து விராட் கோலி விரிவாக கூறும்போது “இசாந்த் சர்மா மற்றும் நானும் ஆரம்பத்தில் இருந்தே இயல்பாக இணைந்திருந்தோம். நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடினாலும் விளையாடா விட்டாலும் எங்களது நட்பு ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை. நாங்கள் எப்போதுமே ஒன்றாக சேர்ந்து இருந்திருக்கிறோம். எந்தவிதமான நிலைப்பாட்டோடும் இல்லாமல் எதையும் முன்னரே கணிக்காமல் வெளிப்படையாகவும் ஆதரவாகவும் இருந்திருக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க:2013ல் சச்சின் டெண்டுல்கரின் அந்த அட்வைஸ் தான் என் நம்பிக்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது – ஜஸ்பிரித் பும்ரா பேட்டி

அவரிடம் எல்லாவற்றையும் என்னால் முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியும். என்னுடைய வாழ்க்கையில் அவர் ஒரு சிறப்பு வாய்ந்த நபராக இருக்கிறார்” என விராட் கோலி பேசியிருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி கேப்டன் ஆக இருந்தபோது இஷாந்த் சர்மா அதிகப்படியான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles