நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் நான்கு தோல்விகளை சந்தித்து ஒன்பதாவது இடத்தில் இருந்தாலும் அதற்குப் பிறகு ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடக்கத்தில் தனது அனுபவம் குறித்தும் சச்சின் டெண்டுல்கரின் அட்வைஸ் குறிக்கும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறினாலும் அதற்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ராவின் வருகையாலும் ரோகித் சர்மாவின் சிறப்பான பேட்டிங் ஃபார்ம் காரணத்தாலும் மும்பை அணி தொடர்ச்சியான போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பும்ரா ஐபிஎல் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “நான் யாருக்காகவும் எப்போதும் பயப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் தனிப்பட்ட வீரர்களின் மிகவும் மதிக்கக் கூடியவன். ஒரு பேட்ஸ்மேன் பார்த்து பயந்து அல்லது மனதளவில் அவர் என்னை விட சிறந்தவர் என்று நினைத்தால் நான் அங்கேயே தோற்ற விடுவேன். எனக்கு மோசமான நாள் அமைந்தாலும் ரன்கள் நான் விட்டு கொடுத்தாலும் யாரும் என்னை தோற்கடிக்க போவதில்லை.
அதைத்தான் நான் எப்போதும் செய்ய விரும்புகிறேன். உங்களுக்கான நாள் இன்று எப்போதும் இருக்காது உங்களால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. முடிந்தவரை உங்களது செயல் திறனில் கவனத்தை செலுத்தி சிறப்பாக விளையாட முயற்சித்தால் அதற்கு பின்னர் விஷயங்கள் தானாக உங்கள் வழியில் வந்து சேரும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் முடிவுகள் எப்படி வந்தாலும் அது குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை.
இதையும் படிங்க:சிஎஸ்கே அணியில் இணைந்த 26 வயது வீரர்.. காயமடைந்த வன்ஷ் பேடிக்கு பதிலாக தேர்வான உர்வில் படேல் யார்?
இது போன்ற விளையாட்டுகளை நான் அப்படித்தான் பார்க்கிறேன். முடிவுகள் எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 2013 ஆம் ஆண்டு நான் ஐபிஎல் தொடரில் நுழைந்த போது சச்சின் டெண்டுல்கர் எனக்கு நிறைய ஆலோசனைகள் கொடுத்தார். அப்போது அவரிடம் இருந்தும் பல மும்பை வீரர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். சச்சின் டெண்டுல்கர் முதல் முறை என்னிடம் ‘உன் எதிர் நிற்கும் தனிநபரை பார்க்காதே. ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார் அவருக்கு நான் பவுலிங் மிஸ் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உன்னுடைய பலத்தில் செயல்படு’ என்று கூறினார். அந்த ஆலோசனை எனக்கு பல மாற்றங்களை கொண்டு வந்தது என்று பேசியிருக்கிறார்.

