ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணியில், 5வது பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், முழுமையான 5வது பந்துவீச்சாளர் இல்லாதது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டெல்லி ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் 2 முதல் 3 ஓவர்கள் சிறப்பாக வீசக்கூடியவர் என்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் மோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் இது குறித்த மோகித் சர்மா பேசும்போது “பும்ரா புதிய பந்தில் வீசினால் கடைசி ஓவர்களில் பிரச்சனை வரலாம். அதனால் பவர் பிளேவில் நிதிஷ் ரெட்டியிடம் புதிய பந்தை கொடுத்துவிட்டு, பும்ராவை கடைசி ஓவர்களுக்காக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் சிவம் துபேவின் ஓவரையும் தவிர்க்க முடியும்” என்று மோகித் சர்மா கூறியுள்ளார்.

