அடேங்கப்பா.! பும்ராவுக்கு மாஸான இடம்.. உலகின் டாப் 10 பவுலர்கள்.. இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் தேர்வு

உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று சொன்னால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தனது பார்வையில் தலைசிறந்த 10 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார். இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மூன்றாவது இடத்தை வழங்கியுள்ளார்.

- Advertisement -

பிராட் வெளியிட்ட பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் நான்காவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் கர்ட்லி அம்ப்ரோஸ் ஐந்தாவது இடத்திலும், டேல் ஸ்டெய்ன் ஆறாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஏழாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் எட்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ ஒன்பதாவது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

இந்த பட்டியலில் பும்ராவுக்கு மூன்றாவது இடம் கொடுத்திருப்பதுதான் இந்திய ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. குறிப்பாக பல முன்னாள் வீரர்களையும், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் பின்னுக்குத் தள்ளி பும்ராவை முதல் மூன்று இடங்களுக்குள் பிராட் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்டூவர்ட் பிராடின் தனிப்பட்ட தேர்வு என்றாலும், பும்ராவின் பந்துவீச்சு உலகின் தலைசிறந்தவர்களின் வரிசையில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles