ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா பேட்டால் மிரட்டினார். கடந்த சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ரன் எடுக்க முடியாமல் விமர்சனங்களை சந்தித்த அவர், இந்த முறை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார்.
வெறும் 32 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 82 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக 22 பந்துகளிலேயே அரைசதத்தை எட்டிய அவர், இந்திய அணியின் இலக்கை எளிதாக்கினார். அவரது அதிரடி காரணமாக 157 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 38 பந்துகள் மீதமிருக்கும்போதே எட்டியது.
போட்டி முடிந்த பிறகு தனது ஆட்டத்தைப் பற்றி பேசிய அபிஷேக் சர்மா, ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் தன்னை வரையறுக்காது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தற்போது கிடைத்திருக்கும் இந்த இன்னிங்ஸ், அவருக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

