ஒரேயொரு சதம்.. இந்திய வரலாற்றில் யாரும் கிடையாது.. ஐபிஎல் தொடரில் பிரம்மாண்ட சாதனை படைப்பாரா விராட் கோலி?

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், அந்தந்த அணிகளின் பயிற்சி முகாம்கள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் கடந்த மாதமே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது சீனியர்களும் பங்கேற்றுள்ளனர்.

- Advertisement -

அதேபோல் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமும் முழு மூச்சாக நடந்து வருகிறது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை புதிய கேப்டனாக ரஜத் படிதர் நியமனம் செய்யப்பட்டார். ஆனாலும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிக தொகை கொடுத்து ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் விராட் கோலிக்கு ரூ.21 கோடி கொடுத்து தக்க வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

சாதனை படைப்பாரா?

- Advertisement -

ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இதனால் விராட் கோலியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கிய காலம் முதலே ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்த சூழலில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் விராட் கோலி பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு அமைந்துள்ளது. இதுவரை டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 9 சதங்களை விளாசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 8 சதங்களையும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு சதத்தையும் விளாசி இருக்கிறார்.

- Advertisement -

3வது இடத்தில் விராட் கோலி

இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சதத்தை விளாசினால், மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 10 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க முடியும். இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தமாக 22 சதங்களை விளாசி இருக்கிறார்.

இவருக்கு பின் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 11 சதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். இவர்களுக்கு பின் விராட் கோலி 9 சதங்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இதனால் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விராட் கோலி ஒரு ஆட்டத்தில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை விளாசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles