ரோஹித்திடம் ரன்கள் வராதது உண்மைதான்.. விராட் கோலி நாளை களமிறங்குவாரா? உண்மையை உடைத்த பேட்டிங் கோச்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை கட்டாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் 87 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களையும், அக்சர் படேல் 52 ரன்களையும் விளாசினர்.

- Advertisement -

அதேபோல் பவுலிங்கில் ஹர்சித் ராணா, ஜடேஜா இருவரும் அசத்தலாக செயல்பட்டனர். இருந்தாலும் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கவில்லை. முதல் ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் இருந்த போது திடீரென விராட் கோலியின் முட்டியில் அடிப்பட்டதால், கடைசி நேரத்தில் விலகியதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகம் செய்யப்பட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, தொடக்க வீரரான சுப்மன் கில் நம்பர் 3ல் களமிறங்கினார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

- Advertisement -

ஏனென்றால் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. அதற்கு முன் விராட் கோலி ஃபார்முக்கு வர வேண்டிய தேவை உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கவுள்ளதால், விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே ஆடினார். அந்த ஒருநாள் தொடரிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. கடந்த மாதத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் விராட் கோலி ஃபார்மில் இருக்கிறாரா என்பதே ரசிகர்களிடையே சந்தேகம்.

- Advertisement -

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி கட்டாயம் களமிறங்க வேண்டும் என்று ரசிகர்களும் ஆவலாக இருந்தனர். இந்த நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடாததால், 2வது ஒருநாள் ஆட்டத்தில் அவரின் ஃபிட்னஸ் எப்படி இருக்கிறது என்ற கேள்வி இருந்தது. இதற்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோட்டக் பதில் அளித்துள்ளார்.

அவர், விராட் கோலி முழு ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்க தயாராக இருக்கிறார். அதேபோல் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மீது எந்த சந்தேகமும் கிடையாது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவர் ரன்கள் சேர்க்காதது உண்மை தான். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ரன்கள் சேர்ப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles