மஹி பாயும், நானும் இணைந்து விளையாடுவது இதுவே கடைசி.. ஷாக் கொடுத்த விராட் கோலி.. வருத்தத்தில் ரசிகர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஆர்சிபி வீரர் விராட் கோலி ஜியோ சினிமாவிற்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

அதில் மகேந்திர சிங் தோனியும், தானும் இணைந்து விளையாடுவது இதுவே கடைசியாக கூட இருக்கலாம். என்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் ஒரு செய்தியையும் கூறி இருக்கிறார். தற்போது விராட் கோலியின் கருத்து இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

நவீன கிரிக்கெட்டின் முடிசூடா ஜாம்பவானாக விளங்கி வரும் விராட் கோலி தனது ஆரம்ப காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்குள் இடம் பிடிக்க சற்று கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டார் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அவரது கேரியரில் ஏற்றங்களும் சறுக்கல்களும் இருந்தன. அப்போது அவருக்கு ஆறுதல் கொடுத்து கைகொடுத்து நின்றவர் மகேந்திர சிங் தோனி.

- Advertisement -

விரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் என ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்திலும் இந்திய அணிக்குள் விராட் கோலி நிரந்தரமாக இடம் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தார். அவரது காலத்தில்தான் சுரேஷ் ரெய்னா ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கேப்டன்சியை விட்டு விலகியதும் இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக இருக்க விராட் கோலியைக் கைகாட்டிய வரும் தோனிதான்.

அந்த அளவிற்கு இருவருக்கும் இடையேயான நட்பு என்பது பிரிக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. ‘நான் கேப்டனாக இருந்தாலும் என்னுடைய கேப்டன் நீங்கள் ஒருவர்தான்’ என்று தோனி குறித்து விராட் கோலி பேசியிருந்தது அப்போதே ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது ஜியோ சினிமாவிற்கு விராட் கோலி அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் மஹி பாயும், நானும் இணைந்து விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து விராட் கோலி கூறும் பொழுது
“மகேந்திர சிங் தோனியும், நானும் மீண்டும் இணைந்து விளையாடலாம். ஆனால் யாருக்குத் தெரியும் இதுவே எங்களுடைய கடைசியாகவும் இருக்கலாம். ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும். நானும், மஹி பாயும் இந்தியாவுக்காக பல நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியுள்ளோம். அது எத்தனை போட்டிகள் என்பது ரசிகர்களுக்கு தெரியும். தோனி எத்தனை போட்டிகள் இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:CSK vs RCB.. கிளி சொல்லிருச்சு.. வெற்றி இந்த அணிக்குதான்.. வைரலாகி வரும் வீடியோ

விராட் கோலி கூறுவது போன்று இதுவே மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசன் ஆக இருக்கும் என்பதில் ஆச்சரியப்படு எதுவும் இல்லை என்பதால் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles