இன்று நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுகிறது.
இந்த சீசனை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வி தழுவி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ஓரளவு நல்ல பங்களிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளிப்படுத்தி இருக்கிறது.
அதுவே பெங்களூர் அணியை எடுத்துக் கொண்டால் ஏழு போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்து அதற்கு பின்னர் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தற்போது ஆறு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் நான்காவது அணியாக தகுதி பெறும். 18 வது ஓவரிலோ அல்லது 10 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை அடைய வேண்டும்.
மேலும் இப்போட்டியில் மழையின் வாய்ப்பு 80 சதவீதம் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. மேலும் இந்த போட்டி நிச்சயமாக நடைபெற வேண்டும் என்று இரு அணி ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பெங்களூரில் உள்ள ஜோதிடர் ஒருவர் அவரது கிளியை வைத்து இன்று நடைபெற இருக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த அந்த ஜோசியக்காரர் இரு அணிகளின் புகைப்படங்களையும் ஒரு சீட்டில் வைத்து இதில் எந்த அணி வெற்றி தெரிகிறதோ அந்த அணியின் சீட்டை எடுக்குமாறு கிளியிடம் கூற, அக்கிளி உடனே கூண்டை விட்டு வெளியே வந்து ஒரு சீட்டை ஜோசியரிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு திரும்பவும் உள்ளே செல்கிறது.
அதை பிரித்துப் பார்த்தால் உள்ளே ஆர்சிபி அணியின் புகைப்படம் உள்ளது. இதன் மூலம் இன்றைய போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க:உண்மையை சொல்லனும்னா.. தோனி விளையாடுவது எங்களுக்கு சாதகம்தான்.. எங்களுக்கு அது பிரச்சனையே இல்லை.. ஆர்சிபி வீரர் ஸ்வப்னில் சிங் பேட்டி
சென்னை அணிக்கு தற்போது புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்று உள்ள ருத்ராடஜ் தனது அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றவும் 17 வருடங்களாக ஒரு கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் பெங்களூர் அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற நிலைமையில் இருப்பதால் இரண்டு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் கோதாவில் களமிறங்க உள்ளனர்.

