ஆஸி உங்களைப் போல நாங்க இல்லை… சாண்ட் பேப்பர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது.

- Advertisement -

இந்தப் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்களை பும்ரா அதிரடியாக காலி செய்ய ஆஸ்திரேலியா அணியானது 181 ரன்களுக்குள் சுருண்டது. இந்த ஏமாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியாவின் ரசிகர்களும், ஊடகங்களும் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகள் கடகடவென விழ 11வது ஓவரின் முடிவில், ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தும் விதமாக ‘சாண்ட் பேப்பர்’ வைத்திருக்கிறார்கள் என கூக்குரலிட்டனர்.

- Advertisement -

இதனை கவனித்த விராட் கோலி சற்றும் யோசிக்காமல் தனது பேண்ட் பாக்கெட்டை திறந்து ரசிகர்களிடம் காண்பித்து எங்களிடம் ‘சாண்ட் பேப்பர்’ இல்லை என்று கூறினார். மேலும் அவர் கைகளை அசைத்து நாங்கள் உங்கள் அணி வீரர்களைப் போல் இல்லை என தக்க பதிலடி கொடுத்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் கொஞ்சம் படிங்க: இந்திய அணி செய்த அந்த தப்புக்கு.. ஐசிசி தண்டனை கொடுத்தே ஆகணும்.. இல்லன்னா நாங்களும் பண்ணுவோம் – ஆஸ்திரேலியா கோச் பேட்டி

- Advertisement -

கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது ஆஸ்திரேலிய வீரர்களான பான் கிராப்ட் , துணை கேப்டன் டேவிட் வார்னர், மற்றும் கேப்டன் ஸ்டீவ் சுமித் ஆகியோர் ‘சாண்ட் பேப்பர்’ மூலமாக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் சில மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதனை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles