இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான கான்ஸ்டஸ் இந்திய அணியின் கேப்டன் பும்ராவுடன் வாய் தகராற்றில் ஈடுபட்டார். அந்த ஓவரின் கடைசி பந்திலே பும்ரா கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி சாம் கான்ஸ்டானுக்கு தக்க பதிலடி கொடுத்தார். கவாஜாவின் விக்கெட் விழுந்தவுடன் இந்திய அணி வீரர்கள் கான்ஸ்டாஸை நோக்கியா படியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் குறித்து,”இந்திய வீரர்கள் கொண்டாடிய விதம் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.” என ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
அவர் நலமாக இருக்கிறாரா என்பதே விசாரித்தேன்:
ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்ட் கூறிய பொழுது, “போட்டி முடிந்ததும் கான்ஸ்டாஸுடன் எனது உரையாடலானது, சாம் கான்ஸ்டாஸ் நலமாக இருக்கிறாரா என்பதைச் சுற்றியே இருந்தது. ஏனென்றால், இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதம் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.
இந்த கொண்டாட்டமானது விளையாட்டின் விதிமுறைகளை மீறாததால், இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
எதிரணி வீரர்கள் நான்-ஸ்டிரைக்கரை அந்த அளவுக்கு சூழ்ந்து கொண்டு வம்பிழுக்கும்போது, அவர் சரியாக இருக்கிறாரா, மேலும் மறுநாளும் சென்று நல்ல ஆட்டத்தை காட்டும் மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிசெய்ய நாம் ஒரு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,”
இதைக் குறித்து ஐசிசி இடமே விட்டு விடுகிறேன்:
மேலும் அவர், “தண்டனை அல்லது அபராதம் இல்லை என்பதால் இந்த கொண்டாட்டமானது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பது தெளிவாக தெரிகிறது.
நான் இந்த கொண்டாட்டத்தை குறித்து ஐசிசி மற்றும் போட்டியின் நடுவர்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தால், அதுதான் நாமும் பின்பற்ற வேண்டிய அளவுகோல் என்று நான் நினைக்கிறேன்.” எனக் கூறி முடித்தார்.

