வீடியோ.. பாம்பு ஸ்விங்.. ஓவருக்கு 4-லே ரன்.. திரும்பி வந்த புவனேஸ்வர் குமார்.. இந்திய அணியில் மீண்டும் இடமா?

சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் நுழைய அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு மெல்ல வர ஆரம்பித்தது. இதை உணர்ந்த ஐசிசி 2007 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்தியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சாம்பியனாக உருவெடுத்தது!

- Advertisement -

இதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் தனிப்பட்ட டி20 தொடர்களைப் போல நடத்த, யாருக்கும் முன்பாகவே கபில்தேவ் ஐ எஸ் எல் என்ற பெயரில் ஒரு தொடரை சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த, அது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. மேலும் அந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை நீக்குவோம் என்கின்ற அளவுக்கு பிசிசிஐ இறங்கியது.

- Advertisement -

பின்பு சுதாரித்துக் கொண்ட பிசிசிஐ ஐபிஎல் என்ற பெயரில் 8 அணிகளை கொண்டு 2008 ஆம் ஆண்டு டி20 தொடரை நடத்த ஆரம்பிக்கிறது. அந்த ஆண்டில் ஆரம்பித்த மாற்றம் இன்று உலக கிரிக்கெட்டையே தலைகீழாக புரட்டி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் வெற்றி டி20 கிரிக்கெட்டில் வெற்றி.

- Advertisement -

இதனால் இந்தியாவில் உள்ள மாநில கிரிக்கெட் வாரியங்கள் ஐபிஎல் போன்ற டி20 லீக்கை சிறிய அளவில் நடத்துகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான் என்று டி20 லீக்குகள் நடத்தப்படுகின்றன.

தற்போது இதில் உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியமும் களமிறங்கி இருக்கிறது. நேற்று முதல் உத்தரப்பிரதேச வாரியம் டி20 லீக்கை ஆரம்பித்து நடத்துகிறது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்த தொடரின் எல்லா போட்டிகளும் உத்திர பிரதேசத்தின் முக்கிய நகரான கான்பூர் நகரில் அமைந்துள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கின்றன.

- Advertisement -

இந்தத் தொடரில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய புவனேஸ்வர் குமார் களமிறங்கினார். அவருடைய பந்துவீச்சில் இப்பொழுதும் பழைய ஸ்விங்குறையவே இல்லை. அந்தக் கலை இன்னும் அவரது கையில் அப்படியே இருக்கிறது.

நேற்று அவர் தன்னுடைய ஆயுதமான இன் ஸ்விங் பந்துவீச்சில் எதிரணியின் பேட்ஸ்மேன் அற்புதமாக வீழ்த்தினார். மேற்கொண்டும் ஒரு விக்கெட் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் அவர் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் என்கின்ற அளவில்தான் விட்டுக் கொடுத்திருந்தார்.

இந்திய அணியில் கடந்த டி20 உலகக்கோப்பை வரை பிரதான வேகப்பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமார்தான் இருந்தார். அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட படுதோல்வியின் காரணமாக, அவரது இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது. காயத்திற்கு பின்னால் அவரது வேகம் குறைந்தது அவருக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. ஆனால் இன்னும் அவரது ஸ்விங் குறையவே இல்லை. இன்னும் ஒரு வாய்ப்பு உலகக் கோப்பை டி20 இந்திய அணியில் அவருக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles