வீடியோ: எப்பா எவ்ளோ பெரிய 6.. டிராவிட் மகன் விளாசிய மிக பெரிய சிக்ஸ்.. ஆச்சரியத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வரும் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் அடித்திருக்கும் சிக்சர் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றி பெற்றதையடுத்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் அசோசியேசனும் தங்களது மாநிலத்தில் உள்ள அணிகளுக்கு இடையே ஐபிஎல் போன்ற லீக் தொடரை நடத்தி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு பிரிமியர் லீக் நடந்து முடிந்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனனால் நடத்தப்படும் மகாராஜா டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிடும் விளையாடி வருகிறார். இவரை மைசூர் வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சமித் டிராவிட் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீடியோ சில காலங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

- Advertisement -

இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் மகன் கர்நாடகாவில் நடைபெறும் டி20 பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதால் அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் முதல் 2 போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தார் சமீத் டிராவிட். எனினும் நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் அடித்த இமாலய சிக்சர் சமித் டிராவிடை பற்றிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மைசூர் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 183 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. எனினும் இந்தப் போட்டியில் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் அடித்த மிகப்பெரிய சிக்சர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் களம் இறங்கிய சமித் டிராவிட் போட்டியின் ஆறாவது ஓவரில் வீசப்பட்ட நான்காவது பந்தினை டீப் மிட் விக்கெட் திசையில் புல் ஷாட் மூலம் சிக்ஸராக மாற்றினார். பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணியைச் சேர்ந்த நவீன் என்பவர் வீசிய ஷாட் பாலை மிகவும் நேர்த்தியாக கணித்து அருமையாக புல் ஷாட் ஆடினார். அவர் அடித்த பந்து மிட் விக்கெட் திசையில் நீண்ட தூரம் சென்று ரசிகர்கள் அமரும் இடத்தில் விழுந்தது. இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்த சிக்சரை அடித்த பிறகு அடுத்த பந்தில் சமித் டிராவிட் ஆட்டம் இழந்தார். அவர் 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக அடித்த இமாலய சிக்சர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அவர் அடித்த சிக்சர் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். ராகுல் டிராவிட் நிதானமாக நின்று விளையாடக் கூடியவர். அவரது மகன்களும் அவரைப் போன்றே கிரிக்கெட் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீத் டிராவிடின் அதிரடி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அடித்த அதிரடி சிக்ஸரின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles