ரோகித் சர்மா யாரையும் வற்புறுத்தல.. இது மாதிரி குப்பை தகவலை பரப்ப வேண்டாம் – ராஜிவ் சுக்லா ஆதங்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த நிலையில் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேர்வு குழு தலைவர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை இருப்பதாக பரவிய தகவலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் விலகிய நிலையில் அதற்கு அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அதில் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்திக்க ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அப்போது இருந்தே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடையே பிரச்சனை இருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா இந்திய அணியில் கேப்டனாக நீடிக்க வற்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் பரவியில் நிலையில் அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜு சுக்லா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் ரோஹித் சர்மா யாரையும் வற்புறுத்தவில்லை எனவும் இப்போது வரை அவர்தான் கேப்டனாக இருக்கிறார் எனவே யாரையும் வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்க வற்புறுத்திகிறார் என்று பரவிய தகவல் முற்றிலும் வதந்தியாகும். தற்போது வரை அவர் மட்டுமே தான் கேப்டனாக நீடித்து வருகிறார். மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பார்ம் இல்லாத காரணத்தால் அவர் தன்னை தானே டிராப் செய்து கொண்டார். பார்ம் என்பது கிரிக்கெட்டின் ஒரு பகுதி மட்டுமே தவிர அதை மட்டுமே வைத்து மற்ற முடிவுகளை எடுக்க முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க:மறைக்க விரும்பல.. இன்னைக்கு ரோகித் ஆடாத உண்மை காரணம் இதுதான்.. எங்க கேப்டன் யாருன்னு காட்டிட்டார்.. கேப்டன் பும்ரா விளக்கம்

மேலும் இந்திய அணிக்குள் பிரச்சனை என்று கூறப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். பயிற்சியாளர், அணியின் கேப்டன் மற்றும் தேர்வு குழு தலைவர் ஆகியோர் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. எனவே இவர்கள் மூவர் குறித்த எந்த குப்பையான தகவலையும் பரப்ப வேண்டாம்” என்று ராஜீவ் சுக்லா கூறியிருக்கிறார். இந்த நிலையில் மும்பை மாநில அணிக்காக ரோஹித் சர்மா ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக ரஞ்சி டிராபி தொடரில் விளையாட உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தற்போது அவர் பயிற்சி பெறும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles