மறைக்க விரும்பல.. இன்னைக்கு ரோகித் ஆடாத உண்மை காரணம் இதுதான்.. எங்க கேப்டன் யாருன்னு காட்டிட்டார்.. கேப்டன் பும்ரா விளக்கம்

ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி ( 2024-25 )தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கேப்டனான ரோகித் சர்மா, ஐந்தாவது டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்றும், அதற்குப் பதிலாக பும்ரா இந்திய அணியை வழிநடத்துவார் என்று அதிகபூர்வமான தகவலை பும்ராவே வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரோஹித், ஐந்து இன்னிங்ஸ்களில் 10 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. முதல் டெஸ்ட் தொடரில் அவர் தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. அவர் மொத்தமாக 31 ரன்கள் எடுத்திருந்தார், அவரது சராசரி 6.2 ஆகும்.

- Advertisement -

ரோகித் இந்த போட்டியில் விளையாடவில்லை:

ஜஸ்ப்ரீத் பும்ரா டாஸ் நேரத்தில் கூறியதாவது, “எங்கள் கேப்டன் இந்த போட்டியில் ஓய்வெடுக்க முடிவு செய்ததன் மூலம் அவர் ஒரு நல்ல தலைமையை வெளிப்படுத்தியுள்ளார். இது எங்கள் அணி எந்தவித சுயநலமும் இல்லாமல் அருமையாக இருப்பதை காட்டுகிறது. அணியின் சிறந்த நலனுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் அணியில் இரண்டு மாற்றங்கள் உள்ளன, ரோஹித் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார், மேலும் ஆகாஷ் தீப் காயம் அடைந்ததால் பிரசித் அணியில் இடம் பெறுகிறார்,”

- Advertisement -

நிறைய சாதனைகள் செய்யப்போகிறோம்:

“இந்த தொடரில் நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாட்டை விளையாடியுள்ளோம். அதுவும் கடைசி போட்டியானது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது என நம்புகிறோம். அதைப்போல் இந்த போட்டியிலும் நிறைய சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆடுகளத்தில் புல் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது போல தெரிகிறது. ஆனால் ஆடுகளத்தில் இருக்கின்ற புற்களால் அதிக சிக்கல்கள் இருக்கும் என தோன்றவில்லை. புதிய பந்து எப்போதும் சவாலாக இருக்கும், ஆனால் அதை சமாளித்தால் இந்த ஆடுகளமே பேட்டிங்க்கு சிறப்பாக இருக்கும்.” எனக் கூறமுடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles